
குழந்தை பிறப்பு
இலங்கைத் தமிழர்களின் கலாச்சாரத்தில் குழந்தை பிறந்து 31 நாட்களுக்கு தாய்க்கும் குழந்தைக்குமான தனித்துவமான பராமரிப்பு வீட்டில் வழங்கப்படும். தாயையும் சேயையும் ஒரு தனிப்பட்ட அறையில் வைத்து, முழுப் பராமரிப்பு வழங்கப்படும் இந்தக் காலத்தில் வீட்டில் துடக்கு இருப்பதாகக் கூறுவார்கள். இக்காலத்தில் பத்திய உணவு என அழைக்கப்படும் விசேட உணவு தாய்க்கு வழங்கப்படும். இந்த உணவு அதிகமான உறைப்பு சேர்க்கப்படாத, வெவ்வேறு மசாலாப் பொருட்கள் கலந்த உணவாக இருக்கும்.[15] தாய்க்கு மருத்துவ குணங்கள் கொண்ட சில தாவர இலைகள் சேர்ந்த சுடுநீர் குளிப்பதற்கு அளிக்கப்படும்.
குழ்ந்தை பிறந்து 41 ஆவது நாளில் தாயும் சேயும் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்தப் பராமரிப்புடன் சில பாரம்பரிய சம்பிரதாய வழக்கங்கள் கைக்கொள்ளப்படும். 6-7 மாதங்களில் குழந்தைக்குச் சோறூட்டல், முதல் பல் முளைக்கும்போது கொழுக்கட்டை அவித்து குழந்தைக்குக் கொடுக்கும் நிகழ்வான பல்லுக் கொழுக்கட்டை, 6-8 மாதங்களில் காது குத்தல் போன்ற நிகழ்வுகளைச் செய்தல்.